--- --:--:-- --

சாலையின் நடுவே வந்த நாயால் விபத்து..!

1

சங்கரன் கோவிலில் சாலையின் நடுவே நடந்து குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சங்கரன்கோவில் திருநெல்வேலி பிரதான சாலையை கடக்க முயன்ற நாயின் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் இருந்த வாகன ஓட்டி கீழே விழுந்தார்.

 

உடனடியாக பின்னால் வந்த அரசு பேருந்து ஓட்டுநர் திடீரென நிறுத்தியதால் அதன் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon