--- --:--:-- --

ஓடும் ரயில் முன் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயற்சித்த மாணவன் பலத்த காயம்..!

10

தெலுங்கானா மாநிலத்தில் ஓடும் ரயில் முன் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயற்சித்த மாணவன் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடி வருகிறார். தெலுங்கானா மாநிலம் வாழைபள்ளியை சேர்ந்த அக்ஷய ராஜ் அங்கு 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

 

இவர் ஓடும் ரயிலின் அருகே நெருங்கி ஆக்சன் ஹீரோ போல் போஸ் கொடுத்து ரீல் வீடியோ எடுக்க முயன்றுள்ளார். ஆனால் வேகமாக சென்ற ரயில் அவர் தலை மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மண்டையில் அடிபட்டு இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் கிடந்தவரை மீட்டு போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon