தடுப்பணையில் குளிக்க சென்ற எட்டாம் வகுப்பு மாணவி உட்பட 3 பேர் பலி..!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தடுப்பணையில் குளிக்க சென்றால் எட்டாம் வகுப்பு மாணவி உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒருவரின் வீட்டிற்கு சென்ற உறவினர்கள் நீர் நிலையில் ஒன்றாக குளித்தனர். அப்போது கால் தவறி ஒருவர் பின் ஒருவராக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் தடுப்பணையில் விழுந்தனர்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தடுப்பணையில் தவறி விழுந்தவர்களை மீட்டுள்ளனர். அதில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் எட்டாம் வகுப்பு மாணவி உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.






