--- --:--:-- --

அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்..!

2

யர்கல்வி செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

 

புதுமைப்பெண் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தில் மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட உள்ளது. இதற்காக நடப்பாண்டில் மட்டும் 698 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆசிரியர் தினமான இன்று புதுமைப்பெண் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.

 

சென்னை ராயபுரம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் இணைந்து புதுமைப்பெண் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைக்கிறார்.

 

Right Menu Icon