வரும் 8ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மேலும் நான்கு மாவட்டங்களுக்கு வரும் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை வரும் எட்டாம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மேலும் நான்கு மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகையையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் வரும் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.






