5 க்கும் மேற்பட்ட மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது..!
ஈரோடு மாவட்டத்தில் தரைப்பாலத்தில் வெளியே மாடுகளை ஓட்டிச் சென்ற பொழுது திடீரென நீர்வரத்து அதிகமானதால் 5 க்கும் மேற்பட்ட மாடுகள் அடித்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ஆத்துப்பாளையத்தில் சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் வெள்ள நீரால் முழுமையாக மூழ்கியது.
இந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை மாடு மேய்ப்பவர்கள் இன்று தரைப்பாலம் வழியே வீட்டிற்கு அழைத்து சென்றனர். அப்போது காட்டாற்று வெள்ளம் அதிகரிப்பதால் பாலத்தை கடக்க முயன்ற மாடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





