காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீடு புகுந்து தாக்குதல்..!
சென்னை அம்பத்தூர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய இளைஞரை குடும்பத்துடன் காவல்துறையினர் கைது செய்தனர். அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மதியழகன் என்பவர் காதலித்து வந்துள்ளார்.
இதனை அறிந்த மாணவியின் சகோதரர் அவனுடன் பேச வேண்டாம் என்று கூறியதை அடுத்து 3 மாதங்களாக மதியழகன் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதியழகன் தனது குடும்பத்துடன் மனோஜ் குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார் .
மேலும் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்து காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மதியழகன் உட்பட அவரது குடும்பத்தினரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





