தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அழகாபுரி, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கன மழையினால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





