நண்பரை வெட்டி படுகொலை செய்த கும்பல்..!
மதுரையில் இளைஞரை அவருடைய நண்பர் உட்பட 6 பேர் சேர்ந்து விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். மதுரை எஸ் எஸ் காலனி காப்பகத்துக்கு உட்பட்ட பிரகாஷ் என்பவர் ஆட்டோ மெக்கானிக் ஆக பணியாற்றினார். இவர் வீட்டு வாசலில் செல்போன் பேசிக் கொண்டிருந்த பொழுது அவரது நண்பர்கள் சுமார் 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் விரட்டி விரட்டி கொலை செய்தனர்.
தடுக்க முயன்றவர்களை மீறி அவர்கள் தப்பியுள்ளனர். தகவல்களைப் பெற்று மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





