--- --:--:-- --

ஐஸ்கிரீம்க்கு பதிலாக ஆணுறையை டெலிவரி செய்த சம்பவம்..!

6

கோவையில் சுவிகி நிறுவனத்தின் வளர்ச்சியின் காரணமாக ஐஸ்கிரீம்க்கு பதிலாக ஆணுறையை விநியோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த ஒருவர் தனது குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமை ஆர்டர் செய்தார்.

 

அதற்காக 200 ரூபாயை ஆன்லைனில் செலுத்திவிட்டு 30 நிமிடங்கள் கழித்து தனியார் உணவு விநியோக நிறுவன ஊழியர் அந்த வீட்டிற்கு வந்து பார்சலை கொடுத்து விட்டு சென்றார். அந்த பார்சலை பிரித்த அந்த நபர் ஐஸ் கிரிமுக்கு பதிலாக இரண்டு ஆணுறை பாக்கெட்டுகளை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

உடனே அவர் தனது நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியதையடுத்து பார்சலை மாற்றி வைத்து விட்டதாகவும் இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர். அத்துடன் ஆன்லைன் மூலம் செலுத்தியதை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon