நான்கு மாத கர்ப்பிணி பெண் தற்கொலை..!
சென்னை வேளச்சேரியில் நான்கு மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரது மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த இந்துமதிக்கும். குமரனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
4 மாத கர்ப்பிணியாக இருந்த இந்துமதியால் ஜூலை மாதம் 22 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்திற்கு கணவர் குமரனின் தாய்தான் காரணம் என அவர் வாட்ஸ் அப்பில் ஆடியோ பதிவிட்டு விட்டு சகோதரிக்கு அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக குமரனின் தாய் சாந்தியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





