4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளரின் கணவர்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்துவரும் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
தனியார் பள்ளி தாளாளர் பிரபாவின் கணவர் காமராஜ் அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் அவ்வப்போது மனைவி நடத்திவரும் பள்ளிக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய குழந்தை அழுவதைக் கண்ட பெற்றோர் மாணவியின் உடலை பரிசோதனை செய்த போது குழந்தையின் உடலில் ரணங்கள் மற்றும் உதிரப்போக்கு கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இதுகுறித்து ஜூலை 4ம் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்திய போது பள்ளியில் இருந்த குழு புகைப்படத்தில் தாளாளரின் கணவர் படத்தை காட்டிய குழந்தை தனக்கு சாக்லேட் கொடுத்து புத்தகங்கள் படிக்கும் அறைக்கு அழைத்து சென்றதாக கூறி உள்ளது.
அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில் திருச்செங்கோட்டில் இருந்து திரும்பி வரும் வழியில் எட்டையபுரத்தில் வைத்து காமராஜரை போலீசார் கைது செய்தனர்.





