நீட் தேர்வில் உள்ளாடைகளை கழற்ற கூறியதாக சர்ச்சை..!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வில் ஒருவர் உள்ளாடைகளை கழற்றி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வரும் 4ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது. கடந்த மாதம் 15ஆம் தேதி நாடு முழுவதும் 1200க்கும் அதிகமான மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இதில் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப மருத்துவமனை வளாகத்தில் தேர்வு எழுத வந்த மாணவர்களின் உள்ளாடைகளை களைய சொல்லி அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக பாதி
க்கப்பட்ட மாணவியின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி மீண்டும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.





