மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் கைது..!
கடலூர் மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரை சேர்ந்த ஜோதிமணி என்பவரின் வீட்டிற்கு வந்த 5 பேர் அவரது வீட்டில் தோஷம் உள்ளது எனவும் தோஷத்தை நிவர்த்தி செய்ய 45 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
ஜோதிமணியிடம் மூன்றாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு மீதி காசை தயார் செய்யும்படி சொல்லி சென்று உள்ளனர். சந்தேகமடைந்த ஜோதிமணி அளித்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராகவேந்திரா சிட்டி செல்லும் வழியில் தேநீர் கடையில் இருந்த போலி சாமியார் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.






