தலைவலியால் அவதிப்பட்டு வந்த தாயே குழந்தைகளை அடித்து கொன்ற கொடூரம்..!
திருப்பூரில் தலைவலியால் அவதிப்பட்டு வந்த தாய் தனது இரண்டு குழந்தைகளையும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா என்பவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் ரேவதிக்கு தலைவலி இருப்பதால் தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். தலைவலி அதிகமாகும் போது மனநிலை பாதிக்கப்பட்டது போல் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிய குழந்தைகளை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அதிர்ச்சி அடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.






