குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பரவல்..!
குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் அதிக அளவில் பரவுவதால் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கு உடம்பில் கொப்புளங்கள் போல் ஏற்பட்டு தக்காளி காய்ச்சல் பரவி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது. காய்ச்சல் பரவும் தன்மை கொண்டது என்பதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும் காய்ச்சல் உள்ள குழந்தைகளை தொடக் கூடாது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி தண்ணீர், பால் அல்லது பழச்சாறு ஆகியவற்றையும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






