--- --:--:-- --

இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

2

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

 

அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது. இதில் படுகாயமடைந்த இரு வாகன ஓட்டிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon