--- --:--:-- --

சிவகங்கையில் விமானம் மூன்று முறை தாழ்வாகப் பறந்ததால் பரபரப்பு..!

6

சிவகங்கை அருகே இண்டிகோ விமானம் மூன்று முறை தாழ்வாகப் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து 78 பயணிகளுடன் இண்டிகோ விமானம் நேற்று மாலை மதுரைக்கு புறப்பட்டது. சென்னையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்ட விமானம் விமான நிலையத்தை அடைந்தது.

 

மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வானில் வட்டமிட்ட இந்த விமானம் சிவகங்கை அருகே மூன்று முறை தாழ்வாக வந்துள்ளது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

 

Right Menu Icon