--- --:--:-- --

இன்று மாலை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!

3

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை சந்திக்கிறார்.

 

இருவரும் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக நேரில் செல்லும் முதலமைச்சர் மரியாதை நிமித்தமாக அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்து முக ஸ்டாலின் சில தகவல்களை தெரிவிக்கின்றன.

 

மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் நன்றி தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon