பிரசவத்தின் போது தவறான சிகிச்சை அளிப்பு..!
வாணியம்பாடி அருகே பிரசவத்தின் போது தவறான சிகிச்சை அளித்ததால் தான் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி உறவினர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். அசோக் குமாரின் மனைவி சுசி சந்திரிகாவை முதல் பிரசவத்திற்காக அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர்.
அங்கு பணியில் இருந்த செவிலியர் பிரசவம் பார்க்க 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் மருத்துவர் இருந்தும் செவிலியர் பிரசவம் பார்த்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். பிரசவத்திற்குப் பிறகு சந்திரிகாவின் உடல்நிலை மோசமானதால் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டது.
பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் சந்திரிகாவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்ல சென்னை கடலூர் மருத்துவர்கள் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
எனவே முறையான சிகிச்சை அளிக்காத ஆரம்ப சுகாதார நிலைய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரிடம் மருத்துவ அலுவலர் மற்றும் காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





