--- --:--:-- --

உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய்..!

12

ரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

 

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது.

 

அதன்படி மாணவர்களின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்காக 698 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

 

Right Menu Icon