--- --:--:-- --

மாஞ்சா காற்றாடி விற்பனைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை..!

11

டெல்லியில் மாஞ்சா காற்றாடி விற்பனைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் வானில் விடும் பட்டத்தின் நூலில் கண்ணாடி பூசப்பட்ட அல்லது உலோகம் கொண்டு செய்யப்பட்டதை பயன்படுத்துகின்றனர்.

 

இதனால் மனிதர்கள், பறவைகள் உள்ளிட்டவர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. பலர் படுகாயமடைந்தனர். தற்போது தொடராமல் தடுக்க முழு அளவில் தடை விதிப்பது மட்டுமே தீர்வாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

இந்த வழக்கில் தீர்ப்பாயம் தடை விதித்து பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் அதற்கு உரிய பதில் தாக்கல் செய்ய டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டது.

 

அதற்கு பதிலளித்துள்ள டெல்லி துணை காவல் ஆணையர் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இந்த உத்தரவு வருவது கண்டறியப்பட்டால் அதற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என குறிப்பிட்டார்.

 

Right Menu Icon