பண மோசடி புகாரில் சிக்கிய நபர் தூக்கிட்டு தற்கொலை..!
பண மோசடி புகாரில் சிக்கிய ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் பொதுமக்களிடம் இருந்து 5 லட்சத்திற்கு மேல் வசூலித்து முதலீடு செய்திருந்தால் காட்பாடியில் சேர்ந்த ஏஜெட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வினோத் குமார் என்பவர் காட்பாடியில் உள்ள நிறுவனத்தில் மாதம் 15,000 ஊதியத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். அவர் தனது கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள் என ஐந்து லட்சம் ரூபாய் வசூலித்து அந்த நிறுவனத்தில் செலுத்தியதாக கூறப்படுகிறது.
பணத்தை செலுத்தி சில மாதங்களே ஆகும் நிலையில் இரண்டு மாதங்களாக வட்டி தொகை வழங்கப்படாததால் பணம் செலுத்திய மக்கள் தொடர்ந்து வினோத்குமாரிடம் கேட்டு வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத் குமார் கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





