--- --:--:-- --

காதலனின் உறவினர்கள் திட்டியதால் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

7

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே காதலிக்கும் இளைஞரின் உறவினர்கள் திட்டியதால் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

விஜய் என்பவர் கோவிந்தபுரத்தில் மாணவனை பார்க்க சென்ற பொழுது அருகே வசிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவியுடன் அவருக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து விசாரித்தபோது மாணவி திருமண வயதை எட்டியதும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக விஜயின் தந்தை கூறியுள்ளார்.

 

மாணவனின் உறவினர்கள் மாணவியை திட்டியதால் மனமுடைந்த மாணவி சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon