காதலியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற காதலன்..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள முத்தையாபுரம் கிராமம் பகுதிவாசிகள் தெருவில் கூடி இருக்க, அங்கு நடந்த இந்த பயங்கர சம்பவத்தை பற்றி தான் அச்சத்தோடு முணுமுணுத்தது வருகின்றனர்.
அதே பகுதியை சேர்ந்த சந்தியா என்ற கல்லூரி மாணவியின் வீட்டிற்குள் புகுந்த கார்த்திக் என்ற இளைஞர் மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சிக்கிறார். தாக்குதல் நடத்திய கார்த்திக் வேறுயாருமில்லை. சந்தியாவை மூன்று வருடங்களாக காதலித்து உயிர் காதலன்.
காதலர்கள் இருவரும் ஒரே ஊர் என்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனியே சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநரான கார்த்திக் மதுவிற்கும் அடிமையானவர். மது குடிக்கும் போதெல்லாம் தலைக்கேறிய போதையோடு சந்தியாவிற்கு போன் செய்து லவ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.
சந்தியாவின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வர காதலை துண்டித்துக் கொள்ளுமாறு அவரை கண்டித்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த காதல் தொடர்ந்து உள்ளது. இந்த நிலையில் கார்த்திக்கின் அன்பு தொல்லை அதிகமானதை தொடர்ந்து வாட்ஸ்அப் உட்பட எல்லாவற்றையும் அவர் பிளாக் செய்திருக்கிறார்.
சந்தியாவின் செயல்கள் ஆத்திரத்தை வரவழைத்துள்ளது. இந்தநிலையில் காதலியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. அது சண்டையாக உருமாற வைத்திருந்த கத்தியால் சத்யாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றிருக்கிறார் கார்த்திக். காதலி இறந்து விடுவார் என்ற அச்சத்தில் இருந்த கார்த்திக் அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சந்தியாவை மீட்டு குடும்பத்தினர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





