--- --:--:-- --

மூன்று குழந்தைகளை ஆற்றில் தூக்கி வீசிய தாய்..!

9

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடும்பத்தகராறு காரணமாக மூன்று குழந்தைகளை ஆற்றில் தூக்கி வீசிவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பரசுராமன் – அமுதா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

 

இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக பெற்ற தாயே மூன்று குழந்தைகளையும் ஆற்றில் தூக்கி வீசிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். குழந்தைகள் உயிரிழந்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

 

குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் போலீசாரின் விசாரணையில் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. 3 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தாயே தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon