--- --:--:-- --

கட்டணமில்லா பேருந்துகள் இன்று முதல் இளஞ்சிவப்பு நிறத்தில் இயக்கப்படும்..!

8

சென்னையில் இயங்கி வரும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் இன்று முதல் இளஞ்சிவப்பு நிறத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை நடைபெற உள்ளது.

 

ஆனால் எந்த பேருந்தில் இலவச பயணம் என்பதில் அடிக்கடி குழப்பம் ஏற்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுகிறது. இந்நிலையில் குழப்பத்தை போக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் இயங்கிவரும் மகளிர் கட்டணமில்லா பேருந்து ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

 

பெண்கள் எளிதாக அடையாளம் காண வெள்ளை போர்டு பேருந்துகளில் முகப்பு மற்றும் பின்புறம் இளஞ்சிவப்பு நிறம் பூசப்படுகிறது. இந்த வண்ணம் பூசப்பட்ட பேருந்தை இன்று ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

 

Right Menu Icon