--- --:--:-- --

இந்த தென்னிந்திய ஹீரோவுடன் நடிக்க காத்திருக்கிறேன்..!

13

றைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.ஜான்வி தற்போது கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து இருக்கிறார். கடந்த வாரம் அது ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் ஆனது.

 

அடுத்து மிலி, Mr & Mrs மாஹி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்து இருக்கிறார் அவர். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆசை இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

 

“நான் தெலுங்கு படம் அல்லது எதாவது தென்னிந்திய படத்தில் நடிக்க அதிகம் ஆர்வமாக இருக்கிறேன். Jr NTR சார் உடன் நடிக்கும் வாய்ப்பை மிகப்பெரிய விஷயமாக நினைக்கிறேன்.” “அவர் ஒரு பெரிய லெஜண்ட். ஆனால் துரஷதிர்ஷ்டவசமாக இன்னும் அவருடன் நடிக்க வாய்ப்பு எனக்கு வரவில்லை. ” “நான் காத்திருக்கிறேன், நல்லது நடக்கும் என நம்புகிறேன்” என ஜான்வி குறிப்பிட்டு இருக்கிறார்.

Right Menu Icon