--- --:--:-- --

மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை..!

1

சிவகங்கை மாவட்டம் கச்சநத்ததில் மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கச்சநத்தம் மற்றும் ஆவாரங்காடு கிராமங்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் 2018ஆம் ஆண்டு நடந்த கோயில் திருவிழாவில் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் மூண்டது.

 

இதுகுறித்து கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் எழுந்ததையடுத்து ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த 20க்கும் அதிகமான இளைஞர்கள் இரவில் கிராமத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு முகம், சண்முக நாதர், சந்திரசேகர், ஆகியோர் உயிரிழந்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து 3 சிறார்கள் உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 சிறார்களின் 2 பேர் இறந்த நிலையில் ஒருவர் தப்பி ஓடியதால் 27 பேர் மீதான வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமையை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டு தண்டனை என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி குற்றவாளிகள் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமார் தீர்ப்பளித்தார்.

 

Right Menu Icon