தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு..!
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி என்ற பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மீண்டும் கர்ப்பமடைந்ததால் கருத்தரிப்பு செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் பெரியநாயகி அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பெரியநாயகியின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






