காதலனுக்கு தியேட்டர் கார்னர் சீட்டில் முத்தம் கொடுத்த அமலா பால்..!
தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை அமலா பால். இதன்பின் விஜய்யுடன் தலைவா, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
மேலும், தற்போது கடாவர் எனும் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டார்.இதில் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை கூறி வந்த அமலா பால், தனது டீனேஜ் வயது காதல் அனுபவங்களையும் கூறியுள்ளார்.
தனது டீனேஜ் வயதில் ஒருவரை காதலித்ததாவும், அவருடன் ஒருமுறை தியேட்டருக்கு சென்று படம் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.அதுமட்டுன்றி, கார்னர் சீட்டில் அமர்ந்து படம் பார்க்கும் பொழுது தனது காதலனுக்கு முத்தம் கொடுத்ததாகவும் அமலா பால் கூறியுள்ளார். ஆனால் அந்த காதலன் யார், அவர் பெயர் என்ன என்பது குறித்து அமலா பால் எதுவும் கூறவில்லை.





