அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 2 கோடி ரூபாய் மோசடி..!
ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 45 நபர்களிடம் 2 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கருப்பண்ணன், ரமேஷ், ரங்கநாதன் மற்றும் மதுரையை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 42 பேரிடம் 2 கோடியே 7 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.
ஆனால் சொன்னபடி அவர்கள் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதற்கிடையில் ரங்கநாதன் கொரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆனந்தி உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




