மனிதர்கள் உயிர் வாழத் தேவையான தட்ப வெப்பம் நிலவில் உள்ளது..!
மனிதர்கள் உயிர் வாழத் தேவையான தட்ப வெப்பத்துடன் கூடிய குகைகள் நிலவில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பகுதியில் குகைகள் இருப்பது 2009 ஆம் ஆண்டு சுற்றுவட்டார பாதையை ஆய்வு செய்து வரும் நாசாவின் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
மனிதர்கள் உயிர் வாழ தேவையான 17 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சூரிய கதிர்வீச்சு மற்றும் மெல்லிய மின் துகள்கள் பாதுகாப்பான வகையில் இருப்பதாக நாசா கூறியுள்ளது.





