--- --:--:-- --

மேற்கு வங்கத்தில் கட்டுக்கட்டாக 20 கோடி ரூபாய் சிக்கியது..!

5

மேற்கு வங்க மாநிலத்தில் அமலாக்கத் துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக 20 கோடி ரூபாய் சிக்கியது. இது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பாரதி அவரது உதவியாளர் மற்றும் மாநில அதிகாரிகள் அமலாக்கப் பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் கட்டுகட்டாக பணம் சிக்கியது. அங்கு சிக்கிய பணத்தின் மதிப்பு 20 கோடி ரூபாயாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

பணத்தை எண்ணுவதற்கு வங்கி அதிகாரிகளின் உதவியை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நாடி இருக்கிறார்கள். அங்கிருந்து செல்போன்களையும் பறிமுதல் செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon