முன்னாள் கணவரை விருந்தினர் போல உபசரிக்க வேண்டும்..!
கணவன் குழந்தையை பார்க்க வரும் பொழுது விவாகரத்து பெற்ற மனைவி விருந்தினரை போல் உபசரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற கணவன் 10 வயது பெண் குழந்தையை பராமரிப்பது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ராமசாமி மனக்கஷ்டத்தை பிரிந்து வாடும் பெற்றோருக்கு அனுமதி வழங்கினார்.
மனக்கசப்பால் பெற்றோருக்கு பாதிப்பில்லை ஆனால் குழந்தைதான் பெரும் துயரத்தை அனுபவிக்கும் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். முன்னாள் கணவருக்கு ஸ்நாக்ஸ், டின்னர் கொடுத்து விருந்தினரை போல் உபசரிக்க வேண்டும் எனவும் இதனால் குழந்தைகள் பெற்றோருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என நீதிபதி அறிவுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




