--- --:--:-- --

முன்னாள் காதலன் சிம்பு குறித்து ஹன்சிகா கூறிய விஷயம்..!

13

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர். விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைத்தும் முன்னணி நடிகர்களுடன் அவர் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக அவரை அதிகமாக திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.

 

இதற்கிடையே அவரை முக்கிய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மஹா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஹன்சிகாவின் 50-வது திரைப்படமாக வெளிவந்துள்ள மஹா திரைப்படத்தில் அவரின் முன்னாள் காதலனான சிம்புவும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இந்நிலையில் ஹன்சிகா தற்போது அவரின் மஹா திரைப்படம் வெளியாகியுள்ளது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் நடிகர் சிம்பு குறித்தும் குறிப்பிட்டு இருக்கிறார். அதன்படி “இப்படத்திற்காக எனக்கு முழு ஆதரவு அளித்த எனது இனிய நண்பன் STR-க்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon