--- --:--:-- --

குக் வித் கோமாளி சீசன் 3யின் டைட்டில் வின்னர் இவர் தான்..!

13

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இரண்டு சீசன்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மூன்று சீசன் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இதில் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

 

இதிலிருந்து ஸ்ருதிகா, தர்ஷன், வித்யூலேகா, அம்மு அபிராமி நேரடியாக பைனல் போட்டிக்கு சென்றனர். இதன்பின், சந்தோஷ் மற்றும் கிரேஸ் கருணாஸ் வைல்ட் கார்ட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பைனலுக்கு சென்டார்கள்.

 

இந்த வாரம் தொடர்ந்து 5 மணி நேரம் ஒளிப்பரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி பைனல் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்தது. இதை ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், தற்போது குக் வித் கோமாளி சீசன் 3யின் டைட்டில் வின்னர் யார் என்று தெரியவந்துள்ளது. ஆம், நடிகை ஸ்ருதிகா தான் குக் வித் கோமாளி சீசன் 3யின் டைட்டில் வின்னர் என தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், இரண்டாம் இடத்தை தர்ஷனும், மூன்றாம் இடத்தை நடிகை அம்மு அபிராமியும் பிடித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon