சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர்..!
அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை முடித்துக்கொண்டு நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் சென்னை திரும்பியுள்ளார். கடந்த மே மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். அமெரிக்காவில் இருந்த அவர் இன்று காலையில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி ராஜேந்தர் சிகிச்சைக்கு உதவியதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது நடிகர் நெப்போலியன், பாரிவேந்தர், ஜிகே வாசன் உள்ளிட்டோரும் நலம் விசாரித்ததாகவும் பிரார்த்தனை செய்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் டி ராஜேந்தர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




