--- --:--:-- --

ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்ட நடிகை பிரியா பவானி..!

3

மிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் குறித்து பல சந்தேகங்கள் கிளம்பி வரும் நிலையில் தற்போது கலவர பூமியாக கள்ளக்குறிச்சி மாறியுள்ளது.

 

அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் மற்றும் பல மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழ் திரையுலக நடிகர்கள் யாரும் மாணவியின் மரணம் குறித்து அமைதி காக்கும் நிலையில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர் ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி என்ற ஹேஸ்டேக் வெளியிட்டு கேட்டுள்ளார்.

 

இந்த டீவீட் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் பெண்ணாக இருக்கும் அவர் முன்னதாக செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon