குட்கா முறைகேடு தொடர்பாக விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு..!
குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ரமணா உட்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி இருந்தது.
ஏற்கனவே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த 240 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. 23 அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது சிபிஐ முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் , முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் டி ராஜேந்திரன் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ முடிவு செய்தது.
மாநில அரசிடம் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் அனுமதி கேட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.





