--- --:--:-- --

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் திருப்பம்..!

1

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவன் தனக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி அவரது நண்பர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகை சித்ரா 2020ஆம் ஆண்டு உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது.

 

இதுபோன்ற சூழலில் ஹேம்நாத்திற்க்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டி அவரது நண்பர் சையது ரோகித் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். காவல்துறை விசாரணையின் பொழுது தான் சாட்சியம் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

நிபந்தனைகளை மீறி செயல்பட்டு வருவதால் அவரது பிணையை ரத்து செய்ய வேண்டுமென ரோஹித் கொண்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Right Menu Icon