வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவரை போலீசிடம் சிக்க வைத்த மனைவி..!
மனைவியைக் கொடுமைப்படுத்திய புகாரியில் வெளிநாட்டிலிருந்து திரும்பியவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து மாநில மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பைரோஸ் தனது கணவர் தன்னை தினமும் துன்புறுத்துவதாக நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வெளிநாடு சென்றவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். எனவே போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





