பிரபல இந்தி பாடகர் பூபிந்தர் சிங் காலமானார்..!
பிரபல இந்தி பாடகர் பூபிந்தர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த பூபிந்தர் சிங் 10 நாட்களுக்கு முன் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. அவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பூபிந்தர் சிங் இசையமைப்பாளராகவும் ஹிப்ஹாப் கலைஞராகவும் ஹிந்தி திரையுலகில் தனி உலகம் படைத்தவர். அவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




