--- --:--:-- --

ஆபத்தை உணராமல் பாலத்தின் மீது ஏறி குதிக்கும் இளைஞர்கள்..!

1

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் பாலத்தின் மீது ஏறி நின்று காவிரி ஆற்றில் குதித்து விளையாடுகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

ஆனால் ஆபத்தை உணராமல் அபாயத்தில் உள்ள பழைய பாலத்தின் மீது ஏறி நின்று இளைஞர்கள் சிலர் ஆற்றில் குதித்து விளையாடி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Right Menu Icon