--- --:--:-- --

கத்தியுடன் தையல் போட்ட மருத்துவர்கள்..!

10

திருப்பத்தூர் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த வழக்கில் கத்தியுடன் சேர்த்து தைத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பகுதியை சேர்ந்தவர்கள் அருண்குமார் மற்றும் தமிழரசன்.

 

இருவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன் அருண்குமாரை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அருண்குமார் நாற்றம்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

காயமடைந்த அருண்குமார் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. பரிசோதித்த மருத்துவர்கள் கத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Right Menu Icon