--- --:--:-- --

இன்று நடைபெறுகிறது குடியரசு தலைவர் தேர்தல்..!

2

நாட்டின் 16 ஆவது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த குடியரசுத்தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

 

ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

 

வாக்குப்பதிவுகள் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்றங்களிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசு தலைவரை தேர்வு செய்ய உள்ளனர்.

 

எம்பிக்களின் வாக்கு மதிப்பு தலா 708 ஆக உள்ளது எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையைப் பொறுத்து மாறுபடுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு 176
ஆக உள்ளது.

Right Menu Icon