மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியைகள் இருவர் கைது..!
சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியைகள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மேலும் 2 ஆசிரியைகளை கைது செய்திருக்கிறது காவல்துறை.
வன்முறையில் ஈடுபட்டதாக 128 பேர் கள்ளக்குறிச்சி காவலர்களால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்பொழுது மேலும் 2 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.






