நடிகை சுஷ்மிதா சென்னை காதலிப்பதாக கூறிய லலித் மோடி..!
நடிகை சுஷ்மிதா சென்னை காதலிப்பதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார். முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லலித்மோடி புதிய வாழ்க்கையைத் தொடங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் சுஷ்மிதா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார். விரைவில் அது நடக்கும் என குறிப்பிட்டிருக்கிறார். ஐபிஎல் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதையடுத்து ஐம்பத்தி ஆறு வயது லலித் மோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




