தோழியை பார்க்க சென்றதை மனைவியிடம் இருந்து மறைக்க கணவர் செய்த காரியம்..!
வெளிநாடு சென்றதை மனைவியிடம் இருந்து மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்த நபரை மும்பை குடியேற்றத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். திருமண பந்தத்தை மீறி தனது தோழியுடன் பழகி வந்த நபர் அவரை பார்ப்பதற்காக வெளிநாடு சென்று மும்பை திரும்பியுள்ளார்.
அதிகாரிகள் சோதனையிட்டபோது பாஸ்போர்ட்டில் அவரது பயண விபரங்கள் குறித்த பக்கங்கள் குறிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியதில் மனைவியிடம் அலுவல் வேலையாக வெளியே செல்வதாக கூறி தோழியை பார்க்க சென்றதாகவும் மனைவி கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




