மது போதையில் பேருந்து சக்கரத்தில் விழுந்து உயிரிழந்த நபர்..!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மது போதையில் இருந்ததாக கூறப்படும் இளைஞர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக மது போதையில் தள்ளாடி வந்த வடமாநில இளைஞர் பலியான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகப் பரவி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் இராமாச்சாரி என்ற இளைஞர். அவிநாசி பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகிறார். வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மது அருந்தியுள்ளார். மது போதையில் பேருந்து நிலையம் முன்பு நிதானமின்றி தள்ளாடி தள்ளாடி நடந்துள்ளார்.
இந்நிலையில் திருப்பூரிலிருந்து செய்யூரு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் சக்கரத்தில் விழுந்து பலியாகியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




